சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களை அதிமுக அம்மா கட்சியின் போட்டியிடும் டி.டி.வி தினகரன் தரப்பு சென்னை பார்க் டவுனில் உள்ள சிதம்பர பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மொத்த விலை கடையில் இருந்து சப்ளை செய்வதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடை உரிமையாளரிடம் தொடர்ந்து 7 மணி நேரமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..
சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு தயாராக வைத்து இருந்த குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமானவரித்துறை உதவி ஆணையர் சந்திரமௌலி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



