கொரோனாவை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
rpudayakumar
கோப்பு படம்

மதுரை: தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்துவருவதாக, தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயக்குமார் பேசினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஐந்து கை சுத்தகரிப்பு இயந்திரங்களை பயன்பாட்டுக்கு அவர் தொடங்கிவைத்து பேசியபோது… பொதுமக்கள் துயர் துடைக்க அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக, அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது…. என்றார்.

மதுரை ரோட்டரி சங்கம் சார்பில் ஐந்து கை சுத்திகரிப்பான் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், ரோட்டரி சங்க ஆளுநர் சமீர் பாட்சா, மாவட்ட செயலர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.