மாலை மாற்றுவது போல் மாஸ்க்கை மாற்றிக்கொண்ட கல்யாண ஜோடி!

Published:

marriage corona maska
marriage corona maska

இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விதிவிலக்கின்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்ததால் இந்தியாவில் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை முன்னதாகவே பிறப்பித்து நடவடிக்கை எடுத்தது. 

எனவே ஆலயங்கள் மூடப்பட்டன; பூஜை ஆகம வழிபாடுகள் கோயில்களுக்குள் மிகச்சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டன! மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க திரையரங்குகள் வணிக வளாகங்கள் கோயில்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன 

இந்த நிலையில் வீடுகளில் திருமணங்கள் வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் பொதுமக்கள் மிகக் குறைவான அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். சில திருமணங்கள் தடைபட்டு நிறுத்தி வைக்கப்பட்டன; சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன

இப்படி ஊரையே கூட்டி திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்த பலர் மிக எளிய முறையில் கோயில்களுக்கு வெளியில் தாலி மாற்றி திருமணத்தை முடித்துக் கொண்டதும் உண்டு. அப்படி ஒரு திருமணம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இப்போது எல்லா வகையிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். அதனை இந்த மணமக்களும் ஏற்படுத்தியுள்ளனர். 

மாலை மாற்றுவது போல், முகக்கவசத்தையும் கையில் எடுத்து அழகு பார்த்து ஒருவருக்கு ஒருவர் அணிவித்துக் கொள்வது வித்தியாசமான நிகழ்வாக மாறிப் போனது. இந்த வீடியோ இப்போது  வைரலாகி வருகிறது. 

முன்னதாக திருமணத்தில் மணமகன் கையால் மணமகள் திருமாங்கல்யம் அணிவித்து கொண்டு இருவரும் மாலை மாற்றி அதோடு முகத்தையும் மூடிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருவருக்கு ஒருவர் முக கவசத்தை அணிவித்து மகிழ்ந்த அந்த வீடியோ இதுதான் !

Related articles

Recent articles

spot_img