சிறுமிக்கு பாலியல் தொல்லை: திமுக பிரமுகர் கைது!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
girl attack image - 2026

சென்னை வியாசர்பாடியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 1வது தெரு சேர்ந்தவர் எஸ் எஸ் பாண்டியன். 70 வயதான இவர் திமுகவின் 45 ஆவது வட்ட தலைவராக உள்ளார் . அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்திவருகிறார்

நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க சென்றுள்ளார். அப்போது பாண்டியன் அந்த சிறுமியிடம் ஆசை காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் அந்தச் சிறுமி கூறியதை அடுத்து சிறுமியின் பெற்றோர் எம்கேபி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்

போலீசார் நேற்று பாண்டியனை பிடித்து விசாரித்தனர். அப்போது கடையின் உள்ளே சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார்

இதையடுத்து பாண்டியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.