பேரழகாய் காட்சிதரும் தெய்வம் முருகன். அவன் பெருமையை சொன்னால் நா என்றும் இனிக்கும் நாள் ஒன்று போதாது.
மனைகள் தோறும் குடியிருக்கும் மன்னனாக திகழ்ந்து உலகம் காக்கும் தெய்வமாக இருந்து நாடிவரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் சிவஜோதியாக எங்கும் ஜொலிக்கிறார்
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் பொய்கையில் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு பிறகு உலக அன்னை பார்வதி ஆறு முகங்களை ஒன்று சேர்த்து வைக்க இப்படி வேலவன் அவதாரம் தொடங்கியது
வேற்படை கொண்டு அசுரர்கள் கூட்டத்தை அழித்து தேவர்களுக்கு விடுதலை தந்து அவர்கள் வசமே சொர்க்கபுரியை வேலவன் தந்தார் சூரபத்மன் பெற்ற வரத்தின் பலத்தால் அவனை மயிலும் சேவலும் ஆக்கிக்கொண்டு தன்னிடம் வைத்துக் கொண்டார்
முருகன் ஜாதகம் லக்னம் கடகம். ராசி துலாம். நட்சத்திரம் விசாகம் லக்னாதிபதி சந்திரன். ராசி அதிபதி சுக்கிரன். நட்சத்திர அதிபதி குரு.
குரு பகவான் ஆட்சி. சுக்கிர பகவான் ஆட்சி. சூரியன் உச்சம் சனி கேது இணைந்து இருப்பது சன்யாசி யோகம்
சந்திர மங்கள யோகம், வாசி யோகம், புதாதித்ய யோகம் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான சுபயோகம் இப்படி எண்ணற்ற யோகங்கள் அமைந்துள்ளன
லக்னாதிபதி சந்திரன் சந்திரன் செவ்வாய் இணைந்ததால் பார்ப்பதற்கு அழகாய் திகழ்ந்தார் இரண்டாம் வீட்டு அதிபதி சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் முருகன் பேசும்போது அருள் மழை பொழிந்தது
சனியும் சந்திரனும் இணைந்து காணப்படுவதால் சன்யாசி யோகம் இதனால் சிவமயமாய் திகழ்ந்து அடியார்கள் அழைத்த உடனே மயில்மீது வந்து காக்கும் தெய்வமாக உள்ளார்
சனி கேந்திரத்தில் உச்சம் பெற்றிருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சுபயோகம் வந்தது இதனால் தாய் சக்தி இடம் வேல் பெற முடிந்தது.
பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ல் கேது உச்சம் பெற்றதால் கேதுவை குரு பார்ப்பதால் முருகப்பெருமானுக்கு ஞானம் இயற்கையாகவே வந்தது அருட்கடலாகத் திகழ்கிறார் ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் ஆட்சி பெற்று பத்தாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் இவரின் தந்தை சிவன் அவருக்கு ஈடு இணை இல்லை
சூரியன் புதன் இணைந்து காணப்படுவதால் புத ஆதித்ய யோகம் இதனால் அறிவு ஆற்றல் ஞானம் புகழ் அனைத்தும் நிறைந்து காணப்படும்
சூரியனுக்கு 12 இல் சுபகிரகம் குரு அமைந்ததால் சுப வாசியோகம் இதனால் முருகன் புகழ் எல்லா உலகங்களிலும் பேசப்படுகிறது சூரியனுக்கு இரண்டு பக்கமும் சுபகிரகங்கள் அமைந்ததால் வெண்சாமரை யோகம்.
இதனால் சூரபத்மனை அழித்து தேவர்களைக் காத்தார் சுக்கிரன் ஆட்சி இதனால் இரு மனைவிகள் கிடைத்தனர். சுக்கிரனும் ராகுவும் இணைவு. முருகன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களும் வெற்றியாக முடிந்தன
சந்திரனும் செவ்வாயும் இணைந்து காணப்படுவதால் சந்திரமங்கள யோகம் கோடிக் கணக்கான அடியார்கள் கிடைத்தார்கள் இதனால் முருகன் தலங்கள் யாவும் நாளுக்கு நாள் பக்தர்கள் பெருகிக்கொண்டே இருப்பார்கள்
பல கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றதாலும் எண்ணற்ற யோகங்கள் இருப்பதாலும் முருகன் ஈடு இணையற்ற தெய்வமாகக் காட்சி தருகிறார் வேல் தாங்கிய இறைவனை வணங்கினால் நமக்கு எம பயம் இல்லை.