Home ஆன்மிகம் பெண்கள் போற்றும் முக்கிய விரதம்! ரிஷி பஞ்சமி!

பெண்கள் போற்றும் முக்கிய விரதம்! ரிஷி பஞ்சமி!

Rishi-pantchami

ரிஷி பஞ்சமி விரதமுறை,மஹிமை

ஆகாயத்தில் வடக்குத் திசையில் கிழக்கு நுனியாய் பெட்டி உண்டி போல் விளங்குகிறது. சப்தரிஷி மண்டலம்.

கிழக்கு நுனியில் உள்ள நட்சத்திரத்தில் இருப்பவர் மரீசி.

அவருக்கு மேற்கே சற்றே தாழ்ந்து காணப்படுவது அருந்ததியோடு கூடிய வசிஷ்டர்.

அவருக்கு மேற்கில் சற்றே உயர்ந்து காணப்படுபவர் ஆங்கிரஸ்.

அவருக்கு அருகில் மேற்கே சதுக்கமாயுள்ள நான்கு நக்ஷத்திரங்களில் வடகிழக்கில் இருப்பவர் அத்திரி.

அத்திரிக்குத் தெற்கில் இருப்பவர் புலஸ்தியர்.

அவருக்கு மேற்கில் புலகர். அவருக்கு வடக்கில், மண்டலத்துக்கு வடமேற்கில் இருப்பவர் கிரது மகரிஷி.

இவர்களை சப்தரிஷிகளாகச் சொல்கிறது விஷ்ணு புராணம்.

இவர்களோடு கஸ்யபர். பரத்வாஜர், கவுசிகர் (விஸ்வாமித்திரர்), ஜமதக்னி இவர்களும்

பூமிக்கு இறங்கி வருகிறார்கள்.

இவர்களை பூஜிக்கும் திருநாளே ரிஷிபஞ்சமி, முதலில் யமுனா பூஜையைச் செய்துவிட்டு, வயதான, மாதவிலக்கு நின்று ஏழு ஆண்டுகளான மாதர்கள் இந்த பூஜையைச் செய்வார்கள்.

இதனால் கொடிய பாபங்களும் விலகும். அஷ்டதள தாமரைக் கோலமிட்டு அதன்மீது நூல் சுற்றிய கலசம் வைத்து சாஸ்திரிகளைக் கொண்டு நடத்த வேண்டிய பூஜை இது.

உதங்கர் என்னும் முனிவர் விதர்ப்ப நாட்டில் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி ஸுசீலை என்பவள். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர்.

முனிவர் தனது பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். மணமான சில தினங்களிலேயே அவள் தன் கணவனை இழந்தாள். இந்தத் துக்கம் தாங்காமல் அம்முனிவர் தன் குடும்பத்துடன் கங்கைக் கரையில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கி சீடர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார்.

அவரது பெண்ணும் அவருக்குப் பணி விடைகள் செய்து வந்தாள்.

Rishi-pantchami-1

ஒருநாள் அவள் தூங்கிக் கொண்டிருந்த போது, அவள் உடல் மீது புழுக்கள் நெளிவதைக் கண்டு, சீடர்கள் தாயிடம் கூறினார்கள். அவள் அப்புழுக்களை அகற்றி, அப்பெண்ணைத் தந்தையிடம் அழைத்துச் சென்று அவளுடலில் அப்புழுக்கள் நெளிந்தற்கான காரணத்தைக் கேட்டாள்.

அவர் தனது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். அதாவது, அப்பெண் இதற்கு முன் ஏழாவது பிறவியில் ஒரு அந்தணப் பெண்ணாக இருந்தாள். மாதவிடாய் காலத்தில் அசுத்தம் என்று எண்ணாமல் வீட்டில் உள்ள பொருட்களைத் தொட்டாள். மேலும், அப்போது பக்தியுடன் அவள் தோழிகள் செய்த ரிஷி பஞ்சமி விரதத்தைப் பார்த்துக் கேலி செய்து பழித்தாள். அதனால் தான் இவள் உடலில் புழுக்கள் நெளிகின்றன.

ஆனால் அந்த விரதத்தை அப்போது பார்த்த புண்ணியத்தால் இவள் தற்போது பிராம்மண குலத்தில் பிறந்து இருக்கிறாள் என்று கூறினார். இந்தப் பாவம் நீங்க வேண்டுமானால் அதே ரிஷி பஞ்சமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறி அதைப் பற்றி விளக்கினார்.

அவளும் அதை அனுஷ்டிக்கவே அவள் நோய் நீங்கியது.

ஆகவே, குறிப்பாகப் பெண்கள் பருவகாலங்களிலும் மற்ற காலங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் அசுத்தம், அனாசாரம் இவற்றால் உண்டாகும் பாவங்கள் நீங்கி, புனிதர்கள் ஆவதற்கும், எல்லா நன்மைகளை அடைவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

(பவிஷ்யோத்தர புராணத்திலிருந்து)

குறிப்பு: 1. விசேஷமாக மாதவிலக்கு நின்றவர்கள்தான் இந்தப் பூஜையை விரதமாக எடுத்துக்கொண்டு செய்வது வழக்கத்தில் உள்ளது.

இந்த விரதத்தை முறையான அனுஷ்டானமாக ஏற்றுக்கொண்டவர்கள் குறைந்த பக்ஷம் 8 வருடங்கள் இடைவிடாமல் தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும்.

இடையில் சில பிரச்சினைகளால் அனுஷ்டிக்க முடியாமல் போனால் அவர் பெயர் சொல்லி அதே நிலையில் உள்ள அவரின் மற்ற உறவினர்கள் யாராவது இதை தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு மோக்ஷம் திண்ணம்.

 1. விநாயக சதுர்த்திக்கு மறுநாள், சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று இப்பூஜை செய்யப்பட்ட வேண்டும்.

முதலில் யமுனை பூஜை செய்த பிறகு, தொடர்ந்து ரிஷி பஞ்சமி பூஜை செய்தல் வேண்டும்.

ஸ்ரீரிஷி பஞ்சம் விரத பூஜை

 1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் (பக்கம் 6 பக்கம் 7 பக்கங்களில் பார்க்கவும்.) இத்துடன் சிவப்பு வஸ்த்ரம் தயார் செய்து கொள்ளவும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

 1. மஞ்சள் பொடி
 2. குங்குமம்
 3. சந்தனம்
 4. பூமாலை
 5. உதிரிப்பூக்கள்
 6. வெற்றிலை, பாக்கு
 7. ஊதுபத்தி
 8. சாம்பிராணி
 9. பஞ்சு (திரிக்காக)
 10. நல்லெண்ணெய்
 11. கற்பூரம்
 12. வெல்லம்
 13. மாவிலை
 14. வாழைப்பழம்
 15. அரிசி
 16. தேங்காய்
 17. தயிர்
 18. தேன்
 19. தீப்பெட்டி
 20. பூணூல்
 21. வஸ்த்ரம்
 22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
 23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
 24. கோலப்பொடி / அரிசி மாவு
 25. பஞ்சகவ்யம்:
 26. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
 27. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

 1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
 2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.
 3. அரிசியில் அஷ்டதள பத்மம் எழுதி, அதன்மேல் கலச ஸ்தாபனம் செய்து, பூஜையை செய்யவும். கலசத்தில் யமுனா நதியின் தீர்த்தத்தை நிரப்பி பூஜை செய்வது உத்தமம்.
 4. நைவேத்ய பொருட்கள்: சாதம், பாயஸம் பட்சணங்கள், பழவகைகள், தேங்காய், வாழைப்பழம் வெற்றிலை பாக்கு.
 5. யமுனா பூஜையின் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பல்வேறு மலர்கள் மற்றும் இதழ்களாலும் அர்ச்சிப்பது விசேஷம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »