சூப்பர் சிங்கர் சாய்சரணுக்கு சத்தமில்லாமல் நடந்த திருமணம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
sai-charan

பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சாய்சரண்.

தனது சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை கற்றுவரும் சாய்சரண் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான சங்கீத மஹா யுத்தம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சாய்சரண் சூப்பர் சிங்கர் டி20, மற்றும் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மரங்கொத்தி பறவை சட்டத்தின் மூலம் டி.இமான் இசையமைப்பில் அவர் பின்னணி பாடகர் ஆனார்.

அதனைத்தொடர்ந்து ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சத்தமில்லாமல் சாய்சரண் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தில் சூப்பர் சிங்கர் போட்டியாளர் சந்தோஷ் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.