அம்பிகையின் மகிமை – 4
அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. “ நாமபாராயணப்ரீதா “ என்று. அம்பாளின் நாமாக்களைச் சொல்வதே அம்பாளைத் திருப்திப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தியானம் விசேஷம்தான் என்றாலும் யாருடைய மனம் அவர்களுடைய வசத்தில் இருக்கிறதோ அவர்கள்தான் தியானம் செய்யலாம். எல்லோராலும் செய்ய முடியாது.
எவனுடைய மனம் ‘இங்கே அங்கே ‘ என்று அலைபாய்கிறதோ (அப்படிப்பட்டவர்கள் தியானம் செய்ய முடியாததால்) அவர்களுக்குச் சுலபமான வழி “ நாமபாராயணப்ரீதா” என்று சொல்வது போல் அம்பாளின் நாமாக்களைச் சொன்னாலே போதும்.