ஐ.பி.எல் ப்ளேஆஃப் மேட்ச் 1 – 10.10.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐ.பி.எல் ப்ளேஆஃப் சுற்றின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக் கிழமை சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே துபாயில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டெல்லி அணியை மட்டையாடச் சொன்னது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஏழு ரன் எடுத்து அவுட்டானார். ஆனால் மறு முனையில் ப்ரித்வி ஷா சூறாவளி போல ஆடிக்கொண்டிருந்தார். தவான் அவுட்டாகும்போது ஷா 29 ரன் எடுத்திருந்தார். அதற்குப் பிறகு ஐந்தாவதாக களமிறங்கிய பந்த் (51) ஆறாவதாக ஆடவந்த ஹெட்மயர் (37) மிக நன்றாக ஆடி டெல்லி ஸ்கோரை ஐந்து விக்கட் இழப்பிற்கு 172 ரன்னாக உயர்த்தினர்.
பின்னர் ஆட வந்த சென்னை அணி முதல் ஓவரில் டியூ பிளேசிஸ் ஆட்டமிழந்தார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் (70), ராபின் உத்தப்பா (63) இருவரும் நன்றாக ஆடினர். 19ஆவது ஓவரின் முதல் பந்தில் கெய்க்வாட் அவுட்டானார். அப்போது சென்னை வெற்றிபெற 24 ரன் தேவைப்பட்டது. அப்போது ஆட வந்த தோனி ஒரு ஃபோர் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி அவுட்டானார். ஆனால் தோனி மூன்று ஃபோர்கள் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் சென்னை நேரடியாக ஃபைனலுக்குச் செல்லும். நாளை நடக்கும் பெங்களூர், கொல்கொத்தா அணிகளுக்கிடையில் நடக்கும் மேட்சில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணியோடு டெல்லி அணி மீண்டும் ஒரு மேட்ச் விளையாடும். அதில் வெற்றி பெற்றால் டெல்லி அணி சென்னை அணியோடு மீண்டும் ஃபைனலில் ஆட வாய்ப்புள்ளது