ipl 2026 season - 2026

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

விளையாட்டு இந்தியா
ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐந்தாவது ஆட்டம் டெல்லி vs லக்னோ – லக்னோ- ஏப்ரல் 1

          முதலில் ஆடிய லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 141 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் 35 ரன், அப்துல் சமது 36 ரன் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக அணியின் தலைவர் ரிஷப் பந்த் 7 ரன் மட்டுமே எடுத்தது அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. டெல்லி அணியில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சமீர் ரிஸ்வி 70 ரன் (5 ஃபோர், 4 சிக்சர்) அடித்தார்.

ஆறாவது ஆட்டம் – ஹைதராபாத் vs கொல்கொத்தா – கொல்கொத்தா – ஏப்ரல் 2

          ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கட் இழப்பிர்கு 226 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (21 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (21 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். இஷான் கிஷன் 14 ரன் அடித்தார். அவருக்குப் பின் வந்த ஹென்றி கிளாசன் (35 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (24 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் அதிரடியாக ஆடினர். கொல்கொத்தா அணியில் முசர்பானி 4 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. கொல்கொத்தா அணியில் ரகுவன்ஷி 52 ரன்னும், ரிங்கு சிங் 35 ரன்னும், ஃபின் ஆலன் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆட்டநாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

ஏழாவது ஆட்டம் – சென்னை vs பஞ்சாப்- சென்னை – ஏப்ரல் 3

          சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது. முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இந்த முறையும் குறைந்த ரன்னுக்கு (7 பந்துகள், 7 ரன், ஒரு ஃபோர்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (22 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர்) சரியாக விளையாடவில்லை. பின்னர் வந்த ஆயுஷ் மாத்ரெ (43 பந்துகளில் 73 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (27 பந்துகளில் 45 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர். கடைசி நேரத்தில் சர்ஃப்ராஸ் கான் (12 பந்துகளில் 32 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) அதிரடியாக ரன் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் விஜயகுமார் வியாஷ்க் 2 விக்கட்டுகளும் பார்லட், யான்சென், சாஹல் மூவரும் தலா ஒரு விக்கட்டும் எடுத்தனர்.

          இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடித் தொடக்கம் தந்தார். அவருடைய ஜோடியான ப்ரப்சிம்ரன் சிங் (34 பந்துகளில் 43 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) நன்றாக ஆடினார். பின்னர் வந்த கூப்பர் கன்னோலி (36 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (29 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் 18.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

எட்டாவது ஆட்டம் – டெல்லி – ஏப்ரல் 4 – மும்பை vs டெல்லி

          முதலில் ஆடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (26 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 51 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), நமன் தீர் (21 பந்துகளில் 28 ரன்), மிட்சல் சாண்ட்னர் (13 பந்துகளில் 18 ரன்)ஆகியோர் சிறப்பாக ஆடினர். பிறர் சோபிக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் பதுன் நிசாங்கா (30 பந்துகளில் 44 ரன்), சமீர் ரிஸ்வி (51 பந்துகளில் 90 ரன், 7 ஃபோர், 7 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்து அந்த அணியை வெற்றி பெறச்செய்தனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.