ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி பஞ்சரத்னம்
நீலாலகாம் சசிமுகீம் நவபல்லவோஷ்டிம்
சாம்பேய புஷ்ப சூஷ்மோஜ்வல திவ்யநாஸாம்
பத்மேக்ஷணாம் முகுர சுந்தரகண்ட பாகாம்
த்வாம் சாம்ப்ரதம் திரிபுரசுந்தரி தேவி வந்தே
பொருள்: திருத்தமான அழகை உடையவளும், நீல நிற கூந்தலை கொண்டவளும், சந்திரனை போன்ற அழகிய, பொலிந்த திருமுகத்தை கொண்டவளும்,
அழகிய புது தளிர்களை போன்ற அதரங்களை கொண்டவளும், செண்பக மலரை போன்ற அழகிய நாசிகளை உடையவளும்,
தாமரை மொட்டு போன்ற அழகிய கழுத்தினை உடையவளுமான திரிபுரசுந்தரியே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
ஸ்ரீகுந்த குத்மள சிகோஜ்வல தந்தபிருந்தாம்
மந்தஸ்மித த்யுதி திரோஹித சாருவாணீம்
நானாமணிஸ்தகித ஹார சுசாரு கண்டிம்
த்வாம் சாம்ப்ரதம் திரிபுரசுந்தரி தேவி வந்தே
பொருள்: திருத்தமான அழகை உடையவளும், மணம் மிகுந்த வெண்மையான மல்லிகை மொட்டுகளைப் போன்ற அழகிய பல்வரிசையை உடையவளும்,
மென் புன்னகையுடன் சுந்தரமாக உரையாடுபவளும், பல்வகையான ரத்தினங்களாலான ஹாரங்களை அணிந்தவளுமான திரிபுரசுந்தரி தாயே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
பீனஸ்தனீம் கனபுஜாம் விபுலாப்ஜ ஹஸ்தாம்
பிருங்காவலி ஜித சோபித ரோமராஜிம்
மத்தேப கும்பகுசபார சுனாம்ர மத்யாம்
த்வாம் சாம்ப்ரதம் திரிபுரசுந்தரி தேவி வந்தே
பொருள்: திருத்தமான வடிவுடையவளும், கனமான ஸ்தனபாரத்தை உடையவளும், நீண்ட திருக்கரங்களும், பரந்த தோள்களை கொண்டவளும், தேனீக்களின் வரிசையோ என வியக்கும் அழகான கருங்கூந்தலை உடையவளும்,
ஸ்தனங்களின் பாரத்தினால் சற்றே வளைந்த, மெலிந்த இடையை உடையவளுமான திரிபுரசுந்தரியே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
ரம்போஜ்வலோரு யுகளாம் ம்ருகராஜ பத்ராம்
இந்த்ராதி தேவ மகுடோஜ்வல பாதபத்மாம்
ஹேமாம்பராம் கர த்ருதாஞ்சித கட்க வல்லீம்
த்வாம் சாம்ப்ரதம் திரிபுரசுந்தரி தேவி வந்தே
பொருள்: திருத்தமான வடிவுடையவளும், ரம்பையை போன்ற மிளிரும் திருக்கண்களை உடையவளும், அழகிய பெண் மானை போன்றவளும், இந்திராதி தேவர்களின் மகுடங்களால் மேலும் பொலிந்த, பிரகாசமான திருவடிகளை உடையவளும், பொன்னிற ஆடையை தரித்திருப்பவளும், கட்கத்தை கையிலேந்திய திரிபுரசுந்தரி தாயே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
மத்தேப வக்த்ர ஜனனீம் மிருடதேஹ யுக்தாம்
சைலாக்ர மத்ய நிலயாம் வர சுந்தராங்கீம்
கோடீஸ்வராக்ய ஹ்ருதி சம்ஸ்திதாம் பதபத்மம்
த்வாம் சாம்ப்ரதம் திரிபுரசுந்தரி தேவி வந்தே
பொருள்: திருத்தமான வடிவுடையவளும், ஆனைமுகனான கணேசனின் தாயானவளும், பரமேஸ்வரனின் சரீரத்தில் சரிபாதி கொண்டவளும், அனைத்திற்கும் மத்தியில் உள்ள மலையில் வாசம் செய்பவளும், அழகிய தோள்களை கொண்டவளும், பக்தர்களின் இருதயத்தில் திருவடிகளை கொண்டவளுமான திரிபுரசுந்தரி தாயே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!
ஃபலஸ்ருதி
பாலே த்வாத் பாத யுகளாம் த்யாத்வா சாம்ப்ராதி நிர்மிதம்
நவீனம் பஞ்சரத்னம் ச தர்யார்த்தம் சரணத்வயே
பொருள்: ஓ பாலாம்பிகே! பஞ்ச ரத்னங்கள் போன்ற அழகிய இத்துதியினை நினது திருவடிகளுக்கு அலங்காரமாக சமர்ப்பித்து உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!