பிப்ரவரி 24, 2021, 10:02 மணி புதன்கிழமை
More

  திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

  Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

  திருவாதிரைக்கு ஒரு வாய் களி!

  பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே

  chidambaramnataraj
  chidambaramnataraj

  திருவாதிரை அன்று நாம் பெரும்பாலும் களி செய்யும் பழக்கம் இல்லை. ஆனா அன்று வேறு மக்கள் திருவாதிரை களி படைக்கிறாங்க. களி படைக்கும் சூழலை நாம் அதாவது நம் முன்னோர் உருவாக்கினார்கள்.

  பட்டினத்தாரின் கணக்கு வழக்கு பார்த்தவர் சேந்தன் செட்டியார்.

  பட்டினத்தார் துறவு மேற்கொண்டதால் சேந்தனார் இடம் மாறினார்.

  சேந்தனார் வருமானம் இல்லாத நிலையில் ஏழை ஒருவர் பசி என வந்தார். சேந்தனார் மனைவி காயாத விறகை பற்ற வைத்து வீட்டில் இருந்த மாவை கிளறி களி செய்தாங்க.

  சாப்பிட்டவர் நல்லா இருக்கு என்று சொல்லி போனார். மறுநாள் தில்லை நடராஜர் சன்னதி மூலஸ்தான படிகளில் (பஞ்சாக்கர படிகளில்) சிறிது சிறிது களி சிந்தி இருந்தது.

  பன்னிரண்டு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருப்பல்லாண்டு திருவிசைப்பா முதலிய பதிகங்களை பாடியவர் சேந்தனார். அவர் களி தந்ததும் நடராஜர் களி உண்டதும் மார்கழி திருவாதிரை நாளிலே..

  ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

  பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

  தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
  திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

  பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ? பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
  சிவ பெருமானைக் குறிக்கிறது.

  சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

  சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்ச