
அதிமுக முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என்று பாஜக கூறுவது அராஜகம்
– காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேச்சு.
1980 பாராளுமன்ற தேர்தலில் திமுக+ இ.காங்கிரஸ் கூட்டணி.
39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கூட்டணி கைப்பற்றியது. 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி!
அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. சட்ட மன்றத்திற்கு தேர்தல் வந்தது. திமுகவும்-112 தொகுதிகளிலும் இ.காங்கிரஸ்-114 தொகுதிகளிலும் போட்டியிட்டன!
“ முதலமைச்சர் யார் என்பதை தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம். “ என்று தமிழக இ. காங்கிரஸ் தலைவர் M.P. சுப்ரமணியம் அறிவித்தார். சர்ச்சை வெடித்தது!
பஞ்சாயத்து டெல்லிக்குப் போனது முதல்வர் வேட்பாளராக கருணாநிதியை அறிவிக்க வேண்டும் என்று திமுக சார்பில் இந்திரா காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திரா காந்தி முழுதாக இணங்கவில்லை. கருணாநிதியே
முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. “ திமுகவைச் சேர்ந்தவர் தான் முதல்வர் வேட்பாளர் “ என்று மறைமுகமான அறிவிப்பை வெளியிட்டார் இந்திரா காந்தி.
இது நடந்த போது திருநாவுக்கரசர் அதிமுகவில் இருந்தார்!
தவறானவை என கருதப்படும் எல்லா செயல்களுக்கும், தேசிய அளவில் காங்கிரஸும் , தமிழ் நாட்டில் திமுகவுமே முன் உதாரண
முன்னோடிகள்