spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள் : வேத நாராயணப் பெருமாள்!

திருப்புகழ் கதைகள் : வேத நாராயணப் பெருமாள்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி 336
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறுத்த தலை – திருவேங்கடம்
வேதநாராயணப் பெருமாள்

பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும். இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.

ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையது, நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் ஆல்யம். வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமத்தினைக் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது.

முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.

இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது. பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம்.

இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும். இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம். இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகம்மா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .

இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம். இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12, 13, 14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை இறைவனின் மீது படும். அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும், இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும், மூன்றாம் நாள் இறைவனின் தலைப் பகுதியிலும் படும்.

இந்தத் திருக்கோயிலில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் திருப்பதி செல்லும் வழியில் நாராயணவன கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் உள்ளது. இதனை திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் என்பர். திருப்பதி போல அதிக கூட்டம் இல்லாத தல்ம் இது. பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாகத் தரிசனம் செய்யலாம். பத்மாவதி, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய தலம் இது.

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது. பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி?

இதன் காரணம் என்னவெனில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.

உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்தத் திருத்தலம் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணத் தடை விலக்கும் தலம் இது.

திருப்பதி, திருமலை செல்பவர்கள் கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் உட்பட பார்க்கவேண்டிய கோயில்கள் சில உள்ளன. மேலத்திருப்பதியில் வெங்கடாஜலபதியப் பார்த்துவிட்டு, பாபநாசம் நீர்வீழ்ச்சி, சிலாதோரணம் பூங்கா ஆகியவற்றைப் பார்க்கலாம். திருப்பதியிலிருந்து சென்னை வரும் வழியில் நாராயணவனம், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களைப் பார்த்து வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe