பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு!

4

பங்குனி உத்திரம் குலதெய்வ சாஸ்தா வழிபாட்டுக்காக… நெல்லை மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை!

பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு தென் மாவட்டங்களில் (நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர்) மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மிக விமர்சையாக நடைபெறும். நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நேற்று குடும்பத்தோடு வேன்–மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு செல்கின்றனர்.

சாஸ்தா கோவில் : அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவுக்கு அய்யனார், சாஸ்தா, சாத்தான் என்று பல பெயர்களில் அழைப்பார்கள்.

இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள் தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.

குலம் காக்கும் தெய்வம் சாஸ்தா என்பதால் குலதெய்வம் என்று அழைக்கிறோம். குடும்பத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் குல தெய்வமான சாஸ்தாவுக்கு தேய்காய் உடைத்து வழிபட்டு நடத்திவிட்டுதான் தான் தொடங்குவோம்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு சாஸ்தா கோவில் பரம்பரையாக இருக்கும். தகப்பன் வழி திருமணமான பெண்ணுக்கு கணவன் வழி சாஸ்தா

ஒரு சாஸ்தா கோவிலில் பல்வேறு சாதியினரும் வழிபாடு செய்வர். பெரும்பாலும் எந்த சாஸ்தா கோவிலும் குறிப்பிட்ட ஒரு சாதிக்குரியதாக இருக்காது. அதே போல் சைவ வைணவ பேதமின்றி பல குடும்பத்தினருக்கு சாஸ்தா (சாஸ்தாவே சிவ ஹரி தானே) இருக்கும்.

முற்காலத்தில் இந்துக்கள் சாதி வேற்றுமை இன்றி ஒன்றுபட்டு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இதுவே நடைமுறை சான்று. இந்த குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும். சாப விமோசனம், திருமண தடை நீங்கும், மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கறையில் தான் அதிகம் இருக்கும்.

காவல் தெய்வங்கள்

கோவிலில் சாஸ்தா இதாவது அய்யனார், புரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார்.எதிரே சாஸ்தா வாகனமாக யானை இருக்கும். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார்.

அவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலிபுதத்தார், சப்பாணி மாடசாமி, உதிரமாடசாமி, அக்கினிமாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடிமாடசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை, வன்னியராஜா, வன்னிதலைவி, முன்னடி மாடசுவாமி, கழுமாடசுவாமி, தளவாய் மாடசாமி, பலவேசகாரன் ஆகிய பரிவார தெய்வங்கள் இருக்கும்.

பக்தர்கள் முதலில் சாஸ்தாவுக்கு ரோஜா பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு, அவருக்கு எதிரே உள்ள காவல்தெய்வங்களுக்கு எல்லாம் தலைவரான கருப்பசாமிக்கு வெள்ளை அரளி, சிகப்பு அரளி, ரோஜா மாலைகளை அணிவித்து வணங்குவார்கள்.

இதை தொடர்ந்து தங்களுடைய இஷ்ட தேவதைகளான சுடலைமாடசாமி, சங்கிலிபுதத்தார், சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடிமாடசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சுடலை ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்வார்கள்.

ஒரே கோவிலில் சிலருக்கு பரிவார தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும். அவர்கள் அந்த தெய்வங்களுக்கு இன்று சிறப்பு பூஜை நடத்துவர்! பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்புபோட்டு வழிபடுவார்கள்.

இரவு 12 மணிக்கு(சில கோவில்களில் மதியம் 12மணி உச்சிகால பூஜையில்) பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த பங்குனி உத்திர சாஸ்தா கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். நெல்லை–தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று சுமார் 2 ஆயிரத்து 451 சாஸ்தா கோவில்களில் திருவிழா நடக்கிறது.

பல சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தங்கள் குல சாஸ்தா கோவில் தெரியாதவர்கள் மூல சாஸ்தாவாக கருதப்படும் நெல்லை பாபநாசம் ஸ்ரீசொரிமுத்தையனார் சாஸ்தாவை வழிபடுகின்றனர்.

சாஸ்தா கோவில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் நான்குநேரி அருகிலுள்ள சித்தூர் ஸ்ரீதென்கரைமகாராஜா சாஸ்தா ஆகும். இந்த கோவிலுக்கு கேரளத்தை சார்ந்த பல பக்தர்கள் வருகின்றனர்

எச்சரிக்கை

குடும்ப கட்டுபாடு பெரும்பாலும் இந்துக்கள் மட்டுமே மேற்கொள்வதால் எதிர் காலங்களில் இந்த சாஸ்தா வழிபாடு தகர்ந்து போகும் அபாயம் உள்ளது.

அது எப்படி என்கிறீர்களா ?

இப்பொழுதெல்லாம் ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகின்றனர் பெரும்பாலான இந்துக்கள். அந்த குழந்தை பெண் குழந்தையானால் திருமணத்திற்கு பின் கணவர் சாஸ்தாவை தொடர்வார். ஆக அந்த குடும்பத்திற்கும் அந்த சாஸ்தா கோவிலுக்கும் தொடர்பு அற்று போகும். இதனால் பல கிராம கோவில்கள் எதிர்காலத்தில் கவனிப்பாரின்றி கேட்பாரற்று போகும்.

இந்துக்களே சிந்திப்போம்.

குலம் காக்கும் குல தெய்வத்தை வழிபடுவோம். வீட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வோம்! கோவிலையும் நாட்டையும் காக்க தாமரை ஆட்சி மீண்டும் மலர பிரார்த்திப்போம்!

– கா.குற்றாலநாதன், நெல்லை

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...