காரமடை அருகேயுள்ள பெள்ளாதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதநாயகி அம்பாள் சமேத சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தியெம் பெருமானுக்கும், எம்பெருமான் சங்கமேஸ்வரருக்கும்,வேதநாயகி அம்பாளுக்கும் மஞ்சள், பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேக பூஜை முடிந்து சிறப்பு அலங்கார பூஜைகள் முடிந்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது. 

இந்த வழிபாட்டில் திராளன பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி யெம்பெருமானையும், வேதநாயகி அம்பாள் சமேத  சங்கமேஸ்வரரையும் தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தகவல்,படங்கள்: சரண்  

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...