இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி: திருப்பதி தேவஸ்தானம்!

tirupati1
tirupati1

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா பரவலால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்து கொண்ட 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தினமும் அனுமதி வழங்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமா ? இல்லையா ? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஜூலை 31-ம் தேதி வரை இந்தப் பாதை மூடப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் வாரி மெட்டு பகுதி வழியாக திருமலைக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பதி ரயில் நிலையம் மற்றும் அலிபிரி அருகே இருந்து இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவைக்குப் பின்னர் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories