மணமகள் காலில் விழுந்த மணமகன்! வைரல்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
marriage
marriage

பொதுவாக நமது இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணங்களின் போதும் பல விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

அதன் படி, ஒவ்வொரு திருமணங்களிலும் திருமணம் முடிந்தவுடன் மணமகனின் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் வாங்குவது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு வழக்கமாகும். பொதுவாக இது போன்ற வழக்கங்கள் இந்து மத கலாச்சாரத்தில் அதிகமாக கடை பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இதற்கு நேர் மாறாக மணமகன் , மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

marriage 1
marriage 1

டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் மணமகன் என் மணமகளின் காலில் விழுதார் என்பதற்கான 9 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் தமிழ் ஆக்கத்தை கீழே காணுங்கள்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

என் சந்ததியை தொடரப்போகிறவள்
என் வீட்டிற்கு லட்சுமியை கொண்டு வரப்போகிறவள்
என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறவள்
என்னை தந்தையாக்கி மகிழ்விக்கப்போகிறவள்
பிரசவத்தின் போது என் குழந்தைக்காக மரணத்தை தொட்டு திரும்ப போகிறவள்
என் வீட்டிற்கு அஸ்திவாராமாக போகிறவள்
அவர் நடத்தையால் சமூகத்தை எனக்கான அங்கீகாரத்தை தரப்போகிறவள்
என் பெற்றோருக்கு பிறகு என்னுடன் பயணிக்கப்போகிறவள்
எனக்காக அவளது பெற்றோரை பிரிந்து வரப்போகிறவள்
இவை எல்லாம் செய்யும் அவளுக்கு, நான் இந்த மரியாதையை கூட செய்யமாட்டேனா? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. காலில் விழுவதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி பலர் தங்கள் கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.