கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது நாற்பத்தி ஒரு நாட்களாக நடந்த வழக்கமான பூஜைக்கு பிறகு கடந்த இருபத்தி ஆறாம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.
அன்றைய தினமே இரவு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவிலில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணி முதல் 6 மணி வரை நெய் அபிஷேகம் செய்தனர்.
சபரிமலையில் தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக குவிந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் எரிமேலி பெருவழிப்பாதையாக வர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள நடைபாதையில் 12 இடங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகையை அதிகரித்திருப்பதை தொடர்ந்து தரிசன நேரத்தில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது வரை இரவு 10 மணிவரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் இன்று முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்குவார்கள் என திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.