சமீப காலங்களில் பாம்புடன் பலர் நட்பு கொள்வதை நாம் காண்கிறோம். எனினும், சில வீடியோக்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட வீடியோக்களுக்கு இணையவாசிகள் கடுமையான விமர்சனங்களையும் அளிக்கின்றனர்.
சமீபத்தில் வைரலான வீடியோவில் இதே போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. இந்த வீடியோவில் (Viral Video), சிறுவன் ஒருவன் பாம்பை கயிறாக பாவித்து ஸ்கிப்பிங் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் திவாகர் சர்மா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மிகவும் கொடூரமாக இருக்கிறது என எழுதியுள்ளார்.
இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் ஒரு கையால் பாம்பின் தலையையும் மறு கையால் பாம்பின் வால் பகுதியையும் பிடித்து அதை கயிறு போல பயன்படுத்தி ஸ்கிப்பிங் விளையாடுவதைக் காண முடிகின்றது.
ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஸ்கிப்பிங் செய்யும்போது, பலமுறை பாம்பு சிறுவனின் கால்களுக்கு அருகில் வந்து விடுகிறது. இது இருவருக்குமே ஆபத்து ஏற்படும் சூழலை ஏற்படுத்துகிறது.
வாயில்லாத ஜீவன்களை வதைப்பது தவறு. எந்த உயிரையும் துன்புறுத்துவதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இந்த உலகில் வாழ சம உரிமை உண்டு என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
வைரலாகி வரும் இந்த வீடியோ மகாராஷ்டிராவில் எங்கோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியானதை அடுத்து, இணைய வாசிகள் மிகவும் கோவத்தில் இருக்கிறார்கள். பாம்பை (Snake) பாடாய் படுத்தும் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரி வருகிறார்கள்.
‘இந்த சிறுவனை உடனடியாக கைது செய்யுங்கள்’ என பலர் கமெண்ட் பிரிவில் எழுதி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்து விட்டன.