செங்கல்பட்டு மாவட்டத்தில் 10400 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கூறினார். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வுகூட்டம் கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்நது.
இதில் ஊரகதொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டார். பின்னர், அமைச்சர் பென்ஜமின், செய்தியாளர்களிடம் கூறியதாவது.செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 10,400 பேர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் 13 சோதனைச்சாவடி, அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
வெளிநாடு சென்று வந்தவர்கள் 3762 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தின் 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 359 ஊராட்சிகளில் கிராம கமிட்டிகள் அமைத்து, வெளிநாடு சென்று வந்தவர்கள் கண்காணிக்கப்படுகிறது.
841 ரேஷன் கடைகளில் அரசு நிவாரணம் வழங்கப்பட தயாராக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிப்பை ஏற்று ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரக்கூடாது.* காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பின்னர் அமைச்சர் பென்ஜமின், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகளில் 1060 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 792 பேர், தனிமைப்படுத்தப்பட்டு அதில் 36 பேர் 28 நாட்கள் சிகிச்சை முடிந்து சென்றனர்.
சில்லறை வியாபாரிகள் மட்டுமே அடையாள அட்டையுடன் மார்க்கெட் பகுதிகளில் அனுமதிக்கப்படுவர். வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அனைவரும் அவர்களது வார்டுகளில் உள்ள மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும்படிமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது என்றார்