இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது. அதாவது இதுவரை 49 பேர் உயிரழந்துள்ளனர்.
கொரோனாவின் வீரியத்தை குறைத்து அதை ஒன்றுமில்லாததாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கட்டுக்கடங்காமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தில்லியில் 1619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 150 பேர் குணமடைந்துவிட்டனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 பேர் தில்லியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.