தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பணிகளில் இருக்க கூடியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. மொத்தமாக 3,023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கின்றனர். 30 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னையில் தான் மற்ற பகுதிகளைவிட அதிக பாதிப்பு காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இதேபோன்று துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.