ஆம்பன் புயல் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் வலு அடைந்து கொண்டே செல்கிறது. இந்த புயல் மிக தீவிரமாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கு முன் தெற்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்தசென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் இருந்து இந்த புயல் 650 கிமீ தூரத்தில் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும்.