தென்காசி மாவட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட புளியங்குடி! ஹோமியோ மாத்திரை வழங்கும் டாக்டர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நலவாழ்வு நெல்லை
puliyangudi doctor

புளியங்குடியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார்கள். அரசின் ஹாட் ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்ட புளியங்குடி 55 நாட்கள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த இரு நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நமது ஊரில் சப்தமின்றி இந்திய ஆயுஸ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி மக்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு புறம் நகராட்சி சார்பில் கபசுர குடிநீர் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது. அதே வேளையில் காவல் தன்னார்வலர்கள் சேவை அமைப்புடன் இணைந்து புளியங்குடி தெலுங்கர் தெருவில் உள்ள சுசீ ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் “அர்சனிக்கம் ஆல்பம் 30” என்ற எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மாத்திரைகள் வீடுவீடாக இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுசீ ஹோமியோபதி மருத்துவர் C.செல்வகுமாரி (கை பேசி எண் 9095048003) தெரிவித்த போது… “மத்திய ஆயுஸ் அமைச்சகத்தின் முதற்கட்ட பரிந்துரைப்படி இந்த மருந்தை புளியங்குடியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா துவக்க காலத்திலேயே இலவசமாக வழங்க முயற்சித்தோம். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டு சேர்ப்பதில் சிரமம் இருந்தது. எனவே காவல் தன்னார்வலர்கள் சேவை அமைப்புடன் இணைந்து கொடுத்து வருகிறோம்.

தற்போது புளியங்குடியில் இயல்பு நிலை திருப்பி வருவதால் வீடுகள் தோறும் இந்த மாத்திரைகளை வழங்கி வருகிறோம். இந்த மாத்திரைகளில் 5 எண்ணம் மட்டும் காலையில் பல் விலக்கியவுடன் சாப்பிட வேண்டும். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த மருந்தை அனைவரும் உட்கொள்ளலாம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.