மாற்றப் பட்ட பொதுத் தேர்வு: ஜூன் 15 முதல்.. அமைச்சர் செங்கோட்டையன்!

exam 2

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஜூன் 1-ம் தேதி தொடங்க இருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்தாலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோவு வரும் ஜூன் 1-ஆம் தேதி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 1ம் தேதி நடத்த பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு
  • ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்
  • பலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது – செங்கோட்டையன்
  • ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு
  • ஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும்
  • ஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
  • ஜூன் 20ந் தேதி விருப்ப மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
  • ஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
  • ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
  • விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்
  • விடுபட்ட 12ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 18ந் தேதி நடைபெறும்
  • ஜுன் 25ந் தேதி பத்தாம் வகுப்பு தொழில்கல்வி தேர்வு நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories