பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த, விவசாயியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்தவர், 11 வயது மாணவி; இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜூனன், 24, என்பவர், கடந்த மார்ச் மாதம் மாணவியை காதலிப்பதாகக்கூறி, அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதையறிந்த மாணவியின் தாய் கடந்த, 7ல் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து, மல்லிகார்ஜூனனை, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தார்