
கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். தனது குழந்தைகளின் சம்மதத்துடன் தான் தாம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தாலும், இந்த திருமணத்தால் அவரது மகன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
தமிழ்த் திரையுலகில் கலைக்குடும்ப வாரிசாக இருந்து, சினிமா நடிகையாக உள்ளே நுழைந்தவர். பெரிதாக நடிப்பில் பேசப்படவில்லை என்றாலும், கலைக்குடும்ப வாரிசு என்பதால், இவர் மீது அவ்வப்போது ஊடக வெளிச்சம் பட்டுக்கொண்டே இருந்தது. மேலும், சில சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டதால், இவர் குறித்து செய்திகளும் வெளியாகியே வந்தன.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார் வனிதா. இருமுறை இவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் சமுத்திரம் படத்தின் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பார். சொக்கத் தங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இவர்களுக்குத் திருமணம் ஆகி ஸ்ரீ ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புணர்வால் இவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா.
இரண்டாவது திருமணமும் வனிதாவிற்கு நிலைக்கவில்லை. அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு முன் தனது குழந்தைகளின் சம்மதத்துடனேயே இதனை திட்டமிட்டதாக அவர் கூறினார்.
ஆனாலும், தன் தாயின் மூன்றாவது திருமணத்தால் மூத்த மகன் ஸ்ரீஹரி வீட்டை விட்டு வெளியே செல்வதில்லையாம். அவருடைய நண்பர்களுடனும் பேசுவதில்லையாம். இந்தத் திருமணம் பற்றி நண்பர்களுக்கும் தெரியும் என்பதால் அதைப் பற்றி அவர்கள் கேட்பார்களே என்ற தயக்கத்தால், நண்பர்களிடமும் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளாராம்.
சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோவை பதிவிட்டால் கூட அதைப் பற்றிக் கேட்பார்களே என்ற கூச்சத்தால், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அவர் விலகியே இருக்கிறாராம். தற்போது ஸ்ரீஹரி தன்னுடைய அப்பாவுடன் தனியாக வசித்து வருகிறார். ஏற்கெனவே பொதுமுடக்க காலம் என்றாலும், அக்கம்பக்கம் கூட வெளியே வராமல், ஸ்ரீஹரி வீட்டிலேயே முடங்கி உள்ளாராம்.
அவருக்கு என்ன சொல்லி மனநிலையை மாற்றுவது என தெரியவில்லை என வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் வருத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.



2000இல௠கலà¯à®¯à®¾à®£à®®à¯, இபà¯à®ªà¯‹ எபà¯à®ªà®Ÿà®¿ 23 வயச௠ஆகிரà¯à®•à¯à®•à¯à®®à¯? கரெகà¯à®Ÿà®¾ à®à®´à¯à®¤à¯à®™à¯à®•.