
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்” தீர்மானம்:
நாம் ஒவ்வொருவரும் நமது பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாத்திடும் ஏதேனும் ஒன்று இரண்டு காரியங்களில் ஈடுபட முயற்சி செய்யலாமே!
தினசரி காலையில் பறவைகளுக்கு அரிசி, தானியங்கள், பிஸ்கட் மற்றும் தண்ணீர் போன்றவைகள் அளித்து மகிழலாமே.
நமது வீட்டில் சேரும் காய்கறி மற்றும் பழங்கள் கழிவுகளை பழைய சாததுடன் சேர்த்து வீட்டு வாசலில் பசுமாட்டிற்குக் கொடுக்கலாமே.
நமது வீட்டை சுற்றியுள்ள இடங்களில் குப்பை சேராமல் இருக்க மாநகராட்சி ஊழியர்களுடன் அன்போடும் பண்போடும் பழகி அவர்களுக்கு உதவிடலாமே.
நமது வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என தரம் பிரித்து வெளியேற்றலாமே.
நமது பகுதியில் எந்த விதமான நோய்த் தொற்றுக்களும் தாக்காமல் இருக்க திருக்கோயிலை மையமாக வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொண்ட நோட்டீஸ்கள் அச்சடித்து வினியோகம் செய்யலாமே.
நமது வீட்டு மாடியில் நமது வீட்டு உபயோகத்திற்கு தேவையான காய்கறிகளை பயிர் செய்துக் கொள்ளலாமே.
நமது பகுதியில் நண்பர்கள் குழு அமைத்து ப்ளாஸ்டிக் இல்லாத பகுதியாக நமது பகுதியை உருவாக்கலாமே.
நமது பகுதியில் உள்ள குளம் குட்டை இன்னமும் இருந்தால் அவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள நண்பர்களை உறவினர்களை ஊக்குவித்து செயலாற்றலாமே.
வாரம் ஒரு நாள் நமது பகுதியில் இடம் தேர்வு செய்து மழை தரும் இரண்டு மரங்கள் நண்பர்களை இணைத்துக் கொண்டு நடலாமே.
ப்ளாஸ்டிக் இல்லாத பகுதியாக நமது பகுதியை மாற்றிட காகித பொருட்கள் உபயோகிப்பது, உபயோகிக்க ஊக்கம் அளிப்பது.
நமது பகுதியில் தொண்டுபுரியும் தூய்மைப் பணியாளர்கள்,பால் பேப்பர் போடுபவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றோருடன் அன்போடு பழகலாமே. அவர்களே நமது பகுதியின் பாதுகாவலர்கள்.
நமது பகுதியில் உள்ள திருக்கோயிலில் வாரம் ஒருமுறை மக்களை அழைத்து சரீர இடைவெளியுடன் அமரச் செய்து கொரோணா போன்ற கொடிய நோய்த்தொற்றுலிருந்து இந்த உலக மக்களளையும், நமது பாரத நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றி அனைவரையும் பூர்ண நலமுடனும் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ சங்கல்பத்துடன் ஏதேனும் ஒரு ஸ்லோகம் குறிப்பாக கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்தல்.
குடிகளைக் கெடுக்கும் ” ” குடி”யை நமது பகுதியில் முழுமையாக நீக்கிட ‘குடி’மக்களின் மனங்களை ஜெயித்து அவர்களின் நல்வாழ்விற்கு உதவுவது.
- அஸ்வத்தாமன், (பாஜக.,)