சீனா: 3 மாதத்தில் ரூ.2.312 ஆயிரம் கோடி லாபம்… சீனாவின் பிரம்மாண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா (Alibaba ) டிசம்பருடன் முடிந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 312 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இது 2018ன் இதே காலகட்டத்தை விட 38 சதவிகிதம் அதிகமாகும். இதில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு லாபவிகிதமாக 770 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா (Xinhua ) தெரிவித்துள்ளது.
சீனாவின் சில்லறை வர்த்தகத்தில் அலிபாபாவின் வாடிக்கையாளர்கள் மூன்றரை கோடி அதிகரித்து 71 கோடி என்ற உச்சத்தை தொட்டுள்ளது. அதை போன்று ஹாங்காங் மற்றும் நியூயார்க் இரண்டு பங்குசந்தைகளிலும் பட்டியலிடப்படும் முதலாவது சீன இணையதள நிறுவனம் என்ற சாதனையையும் அலிபாபா படைத்துள்ளது.