
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுடன் மருத்துவர்கள் உற்சாக நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆயினும் இந்த உயிர்கொல்லி நோய் தங்கள் உயிரை பறித்து விடுமோ என்ற அச்சத்துடனேயே நோயாளிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே இதுவரை கொரோனா வைரசால், 1.483 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாமல் சீனா திகைத்து கொண்டு வருகிறது. ஆனாலும் மன உறுதியோடு இரவு பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உறக்கமில்லாமல் அந்நாட்டு மருத்துவர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கொரோனாவின் பிறப்பிடமான வுகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.