சட்டவிரோதமாக முளைத்த சர்ச் ஒன்றில் விழா நடத்த கிறிஸ்துவ அமைப்பு முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியதை அடுத்து, விழா நிறுத்தப் பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் பூக்கடை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சர்ச் ஒன்றை அகற்ற வேண்டும் என்று கோரி 30 ஆண்டுகளாக ஊர் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மறைத்து அந்த சட்ட விரோத சர்ச்சில் கிறிஸ்தவர்கள் விழா நடத்த முயற்சி மேற்கொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைக்கப் பட்ட நகர இந்து முன்னணியினர், பொதுமக்களை அழைத்துக் கொண்டு, தங்கள் தலைமையில் சர்ச் முற்றுகைப் போராட்டம் நடத்தப் படும் என்று அறிவித்தனர். இதை அடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு விரைந்து, சட்டவிரோத சர்ச்சில் திருவிழா நடத்த தடைவிதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மற்றும் நெல்லை கோட்ட செயலாளர் மிசா சோமன், மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், பாஜக மாநில துணை தலைவர் M.R.காந்தி, இந்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.