
கணவன், மனைவி இருவர் மட்டும், ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில், அவர்கள் வீட்டு கழிவறையில் நீர் வெளியே செல்லாமல் அவ்வப்போது தங்கி இருந்துள்ளது.
இதை பொருப்படுத்தாமல், சிறிய அடைப்பு ஏதாவது இருக்கும் என அசால்டாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். ஆனால், இது தொடர்ந்து நடந்து வருவதால் பிளம்பர் ஒருவரை அழைத்துள்ளனர்.
அப்போது அவர் குழாயில் எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை என்று கூறிய நிலையில், ஏன் தண்ணீர் வெளியே போகாமல் இருக்கிறது என்று கழிவறையில், கழிவுநீர் வெளியே செல்லும் துவாரத்தைப் இருவரும் பார்த்துள்ளனர்.
அப்போது, அந்த துவாரத்தில் இருந்து இரு கண்கள் பளிச்சென தெரிந்துள்ளதை அடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த துவாரத்தைத் திறந்து பார்த்தபோது அதற்குள் 2 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இருந்ததுள்ளது. இதனால் சற்று திகைத்து நின்ற தம்பதி அந்த பாம்பை லாவகமாக வெளியே எடுத்தார்கள்.
இந்நிலையில், இந்த பாம்பானது சாக்கடை நீர் செல்லும் வடிகால் வழியாக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அந்த தம்பதியர் பாம்பை வெளியில் எடுக்கும் விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஆஸ்திரேலியாவில் பாம்புகள் அதிகம், எனவே ஆஸ்திரேலியாவை விலங்குகளுக்கே கொடுத்து விட்டு நாம் வெளியேறிவிடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்கள்.
WATCH: Brisbane Snake Catchers have retrieved a huge, two meter long carpet python from a toilet at a home in Tarragindi. #9News will have full details at 6.00pm. pic.twitter.com/TkYVXF1dU0
— 9News Queensland (@9NewsQueensland) January 31, 2019