கணவனை இழந்த பெண்ணோடு கள்ள உறவு! ஜோதிடரை கல்லால் அடித்துக் கொன்ற உறவினர்கள்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder
murder

ஜோதிடர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனிசாமி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் பகுதியில், 46 வயதான மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 57 வயதான ஜோதிடர் பழனிசாமி கவுந்தப்பாடி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த ஜோதிடரிடம் மல்லிகா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்ற போது இவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜோதிடர் பழனிசாமி, மல்லிகா வீட்டிற்கு அடிக்கடி வந்து உல்லாசமாக இருந்ததை மல்லிகாவின் உறவினர்கள் கண்டித்தனர்.

ஆனால் இருவருக்கும் அந்த பழக்கத்தை விட மனசு இல்லாமல் இருந்ததை அடுத்து, மல்லிகாவின் உறவினர்கள் ஜோதிடர் பழனிசாமியை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்ததினால் அவரும் வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டு, சென்னாநாயக்கர், கோவிந்தன், சூரிய பிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகிய மல்லிகாவின் உறவினர்கள் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை தாக்கியதால் அவர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அனைவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த மல்லிகாவின் குடும்பத்தினர் பழனிசாமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிடர் பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.