செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்திலிருந்து தரையிறங்கி ஒருவருடம் நிறைவடைந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இந்த விண்கலமானது செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ பள்ளத்தில் பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்திலிருந்து தரையிறங்கியது.
இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தினுடைய பல தகவல்களையும் அரிய புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியுள்ளது.
மேலும் பெர்சவரனஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஒருவருடம் நிறைவடைந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
WATCH NOW 🔴
— NASA JPL (@NASAJPL) February 18, 2022
What has @NASAPersevere done since landing on Mars 1 year ago? Listen to our mission experts who are answering your questions live as we celebrate a year of Mars exploration for Perseverance. https://t.co/PdZbguAT7d
Drop in your questions with #askNASA