56ம் நாள்: ஐபிஎல் 2024 – 15.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான் அணியை (144/9. ரியான் பராக் 48, அஷ்வின் 28, டாம் கோலர் காட்மோர் 18, சஞ்சு சாம்சன் 18, போல்ட் 12, சாம் கரண் 2/24, ஹர்ஷல் படேல் 2/28, ராஹுல் சாஹர் 2/26) பஞ்சாப் அணி (18.5 ஓவரில் 145/5, சாம் கரன் 63, ஜிதேஷ் ஷர்மா 22, ரிலீ ரோஸ்கோ 22, ஜானி பெயிர்ஸ்டோ 14, ஆவேஷ் கான் 2/28, சாஹல் 2/31) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் டாம் கோலர் காட்மோர் (18 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 18 ரன்) நிலைத்து ஆடவில்லை.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரியன் பராக் (34 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர்) மற்றும் அஷ்வின் (19 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இவகளுக்குப் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் (பூஜ்யம் ரன்), ரோவ்மன் போவல் (4 ரன்), டொன்னொவன் ஃபெரேரா (7 ரன்), போல்ட் (12 ர்ன), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் சரிவர விளையாடாததால் ராஜஸ்தான் அணி 20ஆவது ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர்.
145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் வீரர்கள் 4.5ஆவது ஓவருக்குள் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (14 ரன்), ரிலீரோஸ்கோ (22 ரன்), ஷஷாங்க் சிங் (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 8 ஓவர் முடிவில் 4/48.
அதன் பின்னர் அணித்தலைவர் சாம்கரன் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஜித்தேஷ் ஷர்மா (20 பந்துகளில் 22 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசியாக அஷுத்தோஷ் ஷர்மா (11 பந்துகளில் 17 ரன்) சாம் ரனுடன் இணைந்து ஆடி அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.
பஞ்சாப் அணி 18.5 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.
இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நிலையில் மாற்றமில்லை; அது 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே உள்ளது.
பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
15.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 13 | 9 | 3 | 19 | 1.428 |
ராஜஸ்தான் | 13 | 8 | 5 | 16 | 0.273 |
சென்னை | 13 | 7 | 6 | 14 | 0.528 |
ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
டெல்லி | 14 | 7 | 7 | 14 | -0.377 |
பெங்களூரு | 13 | 6 | 7 | 12 | 0.387 |
லக்னோ | 13 | 6 | 7 | 12 | -0.787 |
குஜராத் | 13 | 5 | 7 | 11 | -1.063 |
பஞ்சாப் | 13 | 5 | 8 | 10 | -0.347 |
மும்பை | 13 | 4 | 9 | 8 | -0.271 |