கலிபோர்னியாவில் நடந்த பயங்கரமான ஒரு சம்பவம் தற்போது இணையவாசிகளை திகிலடைய செய்துள்ளது.
கலிபோர்னியாவின் பேக்கர்ஃபீல்ட் அருகே பியாஞ்சி ராக் கோப்லர் பந்தயத்தின் போது டோனி இந்தர்பிட்சின் என்பவர் ஒரு காளையால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதல் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், புல்வெளி நிறைந்த மலைப்பாங்கான ஒரு இடத்தில் பந்தயம் நடக்கிறது. அந்த இடத்தில கருப்பு நிறத்தில் காளை ஒன்று தென்படுகிறது,
அப்போது அதன் அருகில் உள்ள பாதையில் ஒருவர் சைக்கிளை வேகமாக ஓட்டி செல்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்த நபரை அங்கு நின்று கொண்டிருந்த காளை ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு பின் டோனி இந்தர்பிட்சின் என்பவர் சைக்கிளில் செல்கிறார்,
எதிர்பாராதவிதமாக அங்கிருந்து வந்த காளை டோனியை சைக்கிளோடு சேர்த்து முட்டி தூக்கி வீசுகிறது. இதில் நிலைகுலைந்து விழுந்தவர் மீண்டும் எழுவதற்குள், அந்த காளை மறுபடியும் வந்து அவரை மீண்டும் முட்டி தூக்கி தூரமாக வீசுகிறது.
இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த மக்கள் பயத்தில் அலறுகின்றனர், டோனி மீண்டும் மெதுவாக எழுந்துகொள்ள முயல்கிறார், இதோடு இந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோவை அங்கிருந்த ரிச்சர்ட் பெப்பர் என்கிற மற்றொரு சக போட்டியாளர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
இவ்வாறு 128 கிமீ வளைந்த நிலப்பரப்பு கொண்ட மலைப்பகுதியில், அதோடு பல்வேறு காட்டு விலங்குகள் கொண்ட இந்த இடத்தில பந்தயம் வைப்பது முட்டாள்தனமான ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து காயப்பட்ட டோனி கூறுகையில் “எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது, இதுவரை நான் இந்த அளவுக்கு காயப்பட்டதில்லை. இந்த தாக்குதலுக்கு பிறகு என் கழுத்தில் ஏற்பட்ட வலி என்னை கொன்றது, இப்போது அந்த வலி என் முதுகு பக்கத்திலும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் டோனி கூறுகையில் இந்த பந்தயத்தை என்னாள் முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டாலும், அடுத்த பந்தயத்திற்காக நான் எதிர்நோக்கி காத்திருக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பல ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது, பலரும் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.