இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் – 4ம் நாள்
– K.V. பாலசுப்பிரமணியன்
நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 45 ஓவர்களில் 125/3 என்ற ரன் கணக்கோடு தொடங்கியது. புஜாரா 50 ரன்னுடனும் ரிஷப் பந்த் 30 ரன்னோடும் களத்தில் இருந்தனர். இன்று மழை பெய்யவில்லை.
நேற்றைய செய்தியில் புஜாரா இன்று நன்றாக விளையாடினால் இந்தியா வெல்லும் என கணித்திருந்தோம். ஆனால் புஜாரா எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து ஆடவந்தவர்கள் ரன் ரேட்டையும் அதிகரிக்கவில்லை; விக்கட் விழுவதையும் தடுக்க முடியவில்லை.
உணவு இடைவேளைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்திய அணி ஆடியது. ஒன்றரை நாள் ஆட்டத்தில் 378 ரன் எடுக்கவேண்டும் இன்பது இலக்கு. மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்தது. 57 ஓவர்கள் ஆடினார்கள். அலக்ஸ் லீஸ் (56), சக் க்ராவ்லி (46), ஜோ ரூட் (76 ஆட்டமிழக்கவில்லை), ஜூனி பெயர்ஸ்டோ (72 ஆட்டமிழக்கவில்லை) என வந்தவர்களில் பெரும்பாலானோர் சிறப்பாக ஆடினர். 259/3 என்ற நிலையில் அவர்களுடைய ரன் ரேட் 4.54. இன்னமும் 119 ரன் அடித்தால் வெற்றி.
இந்திய அணி தோல்வியைத் தழுவும் நிலையில் இருக்கிறது. பும்ராவின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.