கியோட்டோ :
தனது 105 வயதிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஒருவர்.
ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 100 மீ தொலைவை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானைச் சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி(105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.
தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், கூடுதல் பயிற்சி செய்து ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே லட்சியம்எனக் குறிப்பிட்டார்.
இவர் தனது 100வது வயதில் நடந்த ஓட்டப் பந்தயப் போட்டியில், 100மீ தொலைவை 29.83 விநாடிகளில் கடந்த சாதனை படைத்தார். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.