போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், இன்று 4வது நாளாக தொடருவதால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகியுள்ளது.
சென்னையில் காலை 10 மணி நிலவரப்படி 1,654 பேருந்துகள் இயக்கப்படுவதாக – மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கோவை 43% பேருந்துகள், விருதுநகர் 45%, வேலூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 50%, நெல்லை, தருமபுரி 55%, திருவாரூர் 66%, ஈரோடு 71%, சேலம் 86% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில் 100% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.