அவர் வாழ்வில் இன்னொரு பெண்ணாம் ! அவர் இவருக்கு வாழ்த்து சொல்ல..

அடடே... அப்படியா? கிசுகிசு சினிமா

kisu kisu1 - 2026தமிழ் திரையுலகை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று திருமண நாளை கொண்டாடியது. இதையடுத்து கணவனும், மனைவியும் மாறி மாறி சமூக வலைதளத்தில் போஸ்ட் மூலம் அவர்களை அவர்களே வாழ்த்திக் கொண்டனர்.

அவர்களின் வாழ்த்துக்களும், புகைப்படங்களும் ரசிக்கும்படி இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் அண்ணா நீங்களும் அண்ணியும் எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

நடிகர் ஒருவர் கண்ணிலும் பட்டது. உடனே அவர் தனது நண்பன் மற்றும் அவரின் மனைவியை வாழ்த்தினார். இதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டு இப்பொழுது அடுத்தவரை வாழ்த்துகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் தனது காதல் மனைவியை பிரிந்து சிங்கிளாக உள்ளார். ஆனால் அவர் வாழ்வில் வேறு ஒரு பெண் வந்ததால் தான் மனைவியை பிரிந்ததாக கூறப்பட்டது. அது அவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அது குறித்து விமர்சிக்கப்படுகிறது.

முதலில் அந்த விவாதங்களை பார்த்து கோபம் அடைந்த நடிகர் பின்னர் கண்டுகொள்வது இல்லை. தன் வாழ்வில் வந்துள்ள புதிய பெண் வெறும் தோழி அல்ல என்பதை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார் அவர்.

நடிகர் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் அவரின் ரசிகர்களோ, இந்த பெண் வேண்டாம் அண்ணா உங்களின் முன்னாள் மனைவியுடன் சேர்ந்துவிடுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.