ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி வீரியன் பாம்பு!

அடடே... அப்படியா? உலகம் பொது தகவல்கள்
kannadi-veeriyan-kutti

ஆசியாவில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா , சீனா, தைய்வான் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படக்கூடிய மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு தான் கண்ணாடிவிரியன்.

இப்பாம்பு நான்கு வகைகளை கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஏறக்குறைய ஏற்படக்கூடிய அனைத்து பாம்பு விஷக்கடி உயிர் இழப்புகளுக்கும் இவை தான் காரணம்.

தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் காணப்படும். பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.

உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன.

இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
இது கடித்தால் 6 மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும். கோவை மாவட்டத்திலுள்ள வஉசி உயிரியல் பூங்காவில் இந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்றுள்ளது.

இந்தக் குட்டிகளை வனத்துறையினர் பத்திரமாக கையாண்டு அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு எடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.