தமிழகத்தில் இன்று.. 5,883 பேருக்கு கொரோனா தொற்று! 118 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம், தமிழகத்தில் இன்று 5,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதை அடுத்து,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,90,907ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,124ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், சென்னையில் 2ஆவது நாளாக 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்ஜார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,32,618 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,808ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4897 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-covid-19-cases-aug-08
district-wise-covid-19-cases-aug-08

Related articles

Recent articles

spot_img