உரிமைக் குரலை எழுப்பும் நேரம் வந்துவிட்டது: டிடிவி தினகரனின் சகோதரர்!

சற்றுமுன் சென்னை

உரிமைக் குரலை எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்றும், அதிமுகவில் தங்களுக்குத்தான் உரிமை அதிகம் எனவும் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பாஸ்கரன். அப்போது அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில், அவர் மீது தாங்கள் மரியாதை வைத்திருந்ததாகவும், அந்த மரியாதையின் காரணத்தாலேயே எதுவும் பேசாமல் இருந்ததாகவும் கூறினார். ஆனால், இப்போது அதிமுக., மீதான தங்களின் உரிமைக்குரலை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறினார் பாஸ்கரன்.

டிடிவி தினகரன் ஏற்கெனவே அதிமுக., அம்மா அணி என்று தாம் செயல்பட அனுமதிக்குமாறு கோரியுள்ள நிலையில், அதிமுக., மீதான உரிமை குறித்து பாஸ்கரன் குரல் எழுப்பியிருப்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.