ரஷ்யா மீது அமெரிக்கா தடை

உலகம் சற்றுமுன்

04 Aug 09 US sanction Russia - 2026பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவரும் பல வாரங்கள் நடந்த மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் மீண்டனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமென்று ஒரு பிரிட்டன் புலனாய்வு அமைப்பு சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.