ஸ்டம்புக்கு பின் தோனி நின்றால்… காலை வெளியே எடுக்காதீர்: ஐசிசி அறிவுரை

சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
stumped dhony - 2026

ஸ்டம்புக்கு பின் தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருக்கும்போது கோட்டைவிட்டு காலை எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து கோட்டை விடாதீர் என்று ஐசிசி வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளது.

ஐசிசி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, க்ரீஸைவிட்டு வெளியே ரன் எடுக்க ஆசைப்பட்டு வெளியே வந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்தில் ரன் அவுட் ஆக்கினார். இது பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் கொடுக்கப் பட்டிருந்தது. ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது டிவிட்டர் பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.