தோனியின் பாணியை நான் கடைபிடிக்கிறேன்… சையது அக்பருதீன் பெருமிதம்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

dhony akbharuddin - 2026

தோனியின் பாணியை நான் கடை பிடிக்கிறேன் என்று மசூத் அசார் விவகாரத்தில் ஓரளவு வெற்றியை பெற்றுள்ள இந்தியாவின் ஐநா சபைக்கான பிரதிநிதி அக்பருதீன் பெருமிதம் தெரிவித்துள்ளார்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதலில் பாரதத்தின் படைவீரர்கள் 40-பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது!

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது எல்லையில் இரு ராணுவமும் பதிலுக்கு பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர்ந்து பதற்றம் நீடித்தது! இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோடு பயங்கரவாத முகாமில் குண்டுகளை வீசி இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்

இதைத் தொடர்ந்து ஐநாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன ஆனால் இந்தத் தீர்மானம் 4 வரை இந்தியாவால் கொண்டு வரப்பட்ட போதும் சீனா தனது வீட்டு அதிகாரத்தால் தடை போட்டது.

இதனால் இந்த தீர்மானம் நிறைவேறாமல் தள்ளிப் போய் வந்தது. ஆனால் இந்த முறை சீனா மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஒப்புதல் அளித்தது! இதையடுத்து ஐநாசபை மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்

இந்தியா எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகளால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று முக்கியமான பணிகளைச் செய்த ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் இது குறித்து கூறிய போது, நான் தோனியின் பாணியை பின்பற்றுகிறேன்; உங்கள் இலக்கை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்யும்போது நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கிறது என்று ஒரு கட்டத்தில் நினைத்துக் கொள்ளுங்கள்! எதையுமே முடிந்துவிட்டது அவ்வளவுதான் என்று எப்போதும் கூறாதீர்கள்! எதையும் முன்னரே கைவிட்டு விடாதீர்கள் என்பது இந்த விவகாரத்தில் தெரியவந்துள்ளது… என்று சையத் அக்பருதீன் பெருமிதத்துடன் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.