ஸ்ரீரங்கம் திருக்கோவில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

Published:

srirangam ther - 2026திருச்சியில் உள்ள, ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு,  ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா என்று முழங்கி  நம்பெருமாளின் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளி மற்றும் சாற்று மாலையை அணிந்தபடி புறப்பட்ட நம்பெருமாள், சித்திரைத் திருத்தேரில் எழுந்தருளினார். srirangam ther2 - 2026

நம்பெருமாளின் திருத்தேரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், திருவரங்கா ஸ்ரீரங்கா என்ற முழக்கத்துடன் பக்தி பரவசம் பொங்க வடம் தொட்டு இழுத்தனர்.

srirangam ther3 - 2026

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படங்களுக்கு …

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img