ஜார்கண்டில் பாஜக., அலுவலகம் மீது குண்டுவீச்சு! நக்சலைட்டுகள் வெறிச்செயல்!

Published:

bjp office attack in jarkhand1 - 2026ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள், பாஜக., அலுவலகத்தில் குண்டு வீசித் தகர்த்தனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த வெறிச் செயலை நக்சலைட்டுகள் நிகழ்த்தியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் மாநில பாஜக தலைவருமான அர்ஜுன் முண்டா போட்டியிடும் குந்தி தொகுதிக்கு உட்பட்ட கர்சவன் என்ற இடத்தில் உள்ள பாஜக அலுவலகத்தை நக்சலைட்டுகள் நேற்று நள்ளிரவு குண்டு வீசி தகர்த்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் இன்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.bjp office attack in jarkhand2 - 2026

நக்சலைட்கள் மகாராஷடிராவில் உள்ள கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். அதில் 15 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் நடந்து இரு தினங்களில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மேலும், பிஜேபி எம்.எல்.ஏ., பீமா மாண்டவி கடந்த எப்ப்ர. 9ம் தேதி சட்டீஸ்கரில் தாண்டேவாடாவில் நக்சல்களால் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டார். அங்கே ஏப். 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதுபோல், இங்கும் நக்சல்கள் தேர்தல் நேரத்தில் ஒரு கொடூரத் தாக்குதலை பாஜக., அலுவலகம் மீது நிகழ்த்தியுள்ளனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img