ஏ(வே)ட்டிக்குப் போட்டி: பிரபலமாகி வரும் பாக்கெட் புடவைகள்!

இந்தியா தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

saree packet1 - 2026இப்போது பெண்கள் மத்தியில் பாக்கெட் வைத்த புடவைகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு டிசைன்களில் செலக்ட் செய்த காலம் போய் இப்போது எங்கே பேக்கட் வைத்தால் தங்களுக்கு வசதி என்று யோசித்து புடவைகளை தேர்ந்தெடுக்கும் காலம்!

இதை யோசித்து இப்போது புடவை தயாரிப்பாளர்கள் சரியாக மடிப்பில் பாக்கெட் வரும் வண்ணம் புடவைகளை தயார் செய்து தருகிறார்கள். தற்போது புகழ்பெற்ற வணிக நிறுவனங்கள் ஜவுளிக்கடைகளில் இந்த பாக்கெட் வைத்த புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன! இவற்றை ஆர்வத்துடன் பெண்கள் வாங்கி செல்கின்றனர்!

முன்னதாக வெல்க்ரோ பாக்கெட் தோத்தீஸ் என்று, ஒட்டிக்கோ கட்டிக்கோ என்ற விளம்பரத்துடன், பாக்கெட் வைத்த வேட்டிகள்  விற்பனைக்கு வந்தன. இவற்றை பெரும் செலவு செய்து விளம்பரம் மூலம் இளைஞர்களிடம் கொண்டு சென்றனர்.

ஏட்டிக்குப் போட்டியல்ல… வேட்டிக்குப் போட்டி!  

saree packet2 - 2026

வேட்டி அணியும் கலாச்சாரம் இளைஞர்களிடம் வெகுவாக குறைந்து வருவதால் இளைஞர்களை கவர இதுபோன்று பாக்கெட் வைத்த வேட்டிகள் சந்தையில் வந்தன

இப்போது அதற்கு போட்டியாக இளம் பெண்களைக் குறிவைத்து இது போன்று பாக்கெட் வைத்த புடவைகள் சந்தையில் குவிந்து வருகின்றன. இந்தப் புடவை அணிந்து கொண்டால் தனியாக மணி பர்ஸ் அல்லது கைப்பை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விளம்பரப்படுத்தப் படுகிறது.

மேலும் பெண்களுக்கு முக்கியமான லிப்ஸ்டிக் கண்-மை சிறிய சீப்பு கண்ணாடி என அழகு சாதனங்களை வைத்துக்கொள்ளும் மேக்கப் கைப்பை ஆகவும் இந்த பாக்கெட் வைத்த புடவைகளை விளம்பரம் செய்கிறார்கள்

முற்காலத்தில் புடவை முந்தானையில் பணத்தை, சில்லறைகளை, சாவிகளை முடிந்து வைத்தார்கள் பெண்கள். பின்னர் வயதான பெண்கள் சுருக்குப் பை வெற்றிலை வைத்துக் கொள்வதற்காக இடுப்பில் செருகிக் கொண்டார்கள். இப்போது இளம் பெண்களைக் கவர இந்த பாக்கெட் புடவைகள் வெளிவந்துள்ளன.

வேட்டியின் பாக்கெட்களில் ஜிப் வைத்து தைத்தால் என்ன என்று கேள்வி எழுந்தது போல், இனி வரும் காலங்களிலும் புடைவையிலும் ஜிப் வைத்து தைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.